• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ராவ்

August 25, 2018 தண்டோரா குழு

உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ‘கண்ணே கலைமானே’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக அட்லீயின் உதவியாளர் ஈனாக் இயக்கத்தில் உதயநிதி நடிப்பதாக இருந்தது.‘மேயாத மான்’ படத்தில் நடித்த பிரியா பவானிசங்கர், இந்துஜா இருவரும் ஹீரோயின்களாக ஒப்பந்தமானார்கள். ஆனால், திடீரென ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பு இந்தப் படம் டிராப்பானது.

இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார். இரண்டு ஹீரோயின்கள் நடிக்க இருக்கும் இந்தப் படத்தில், ஒரு ஹீரோயினாக நித்யா மேனன் ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான அதிதி ராவ் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்த மாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதையடுத்து மிஷ்கின் இயக்கும் படத்தில் சாந்தனு ஹீரோவாக நடிப்பதாக சொல்லப்பட்டது. அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த நிறுவனம் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. தற்போது அதே கதையில் உதயநிதி நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க