• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மிரள வைக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வசூல் சாதனை !

April 29, 2019 தண்டோரா குழு

3 நாட்களில் 8,384 கோடி வசூல் செய்து அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் சாதனை படைத்துள்ளது.

மார்வல்ஸ் படங்களுக்கு உலகம் முழுவதும் மிக பெரிய வரவேற்பு உண்டு, அதிலும் அவெஞ்சர்ஸ் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மார்வல் சினிமா உலகத்தின் கதையை மையப்படுத்தி உருவானது ‘அவெஞ்சர்ஸ்’ பட தொடர். தற்போது ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்துடன் இந்த தொடர் முடிவடைந்துள்ளது.

கடைசியாக கடந்த ஆண்டு அனைத்து மார்வல் சூப்பர் ஹீரோக்களும் இணைந்து அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தில் நடித்திருந்தனர். இதில் அளிக்க முடியாத கொடூர வில்லனாக தானோஸ் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டு இருந்தது. அப்படத்தில் பாதி உலகம் அழிந்து, பாதி கதையுடன் முடிந்ததால், இந்த படத்தின் தொடர்ச்சியாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ படம் உருவாக்கபட்டது. இதனால் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில்,கடந்த வாரம் உலகம் முழுவதும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் வெளியானது. வெளியான 3 நாட்களில் 1.2 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பின்படி 8,384 கோடியாகும்.

இதுவரை முதல் வாரம் அதிக வசூல் செய்த படத்தில் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் படம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் அதனை முறியடித்து முதல் இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் 2000க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியான இந்த படம் 3 நாட்களில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

மேலும் படிக்க