• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாரி 2 படப்பிடிப்பின் போது காயமா தனுஷ் விளக்கம் !

June 23, 2018 தண்டோரா குழு

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது மாரி 2 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

மேலும் வரலட்சுமி, வித்யா, கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும், டோவினோ தாமஸ்க்கும் தனுஷுக்கு இடையேயான சண்டைக்காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக தனுஷுக்கு வலது காலிலும், இடது கையிலும் காயம் ஏற்பட்டது.

இதனால், அதிர்சியடைந்த படக்குழுவினர் உடனடியாக தனுஷுக்கு முதலுதவி அளித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையில் தனுஷுக்கு படுகாயம் ஏற்பட்டு விட்டதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“என் அன்புக்குரிய ரசிகர்களே, எனக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. நான் தற்போது நலமாக இருக்கிறேன். உங்கள் அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி. நான் என்றும் உங்களது அன்பிற்கு கடமைப்பட்டிருக்கிறேன். என் பலத்திற்கு தூண் போன்று இருக்கும் உங்களை மிகவும் நேசிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தனுஷின் இந்த டிவிட்டைப் பார்த்தப் பிறகு தான் அவரது ரசிகர்கள் சமாதானம் அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க