• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மஹத் ஒரு குறும்படம் போடலாமா? – கமல்

August 25, 2018 தண்டோரா குழு

பிரபல தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் கமல்ஹாசன் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுடன் அகம் டிவி வழியாக உறையாற்றுவார்.

அந்த வகையில் இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோ வீடியோவை பிக் பாஸ் குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். முதல் ப்ரோமோவில், பிக்பாஸ் மேடையில் உள்ள ஆடியன்ஸ் எல்லோரும் மகத் மற்றும் ஐஸ்வர்யாவை கண்டிக்குமாறு கமலிடம் கூறுகின்றனர். இதற்கு கமல் மெனு குடுத்துட்டீங்கள்ல! இனிமே சமையல் தான்! தாளிச்சிடலாம் அவங்கள! என்று கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது வெளியிடப்பட்ட இரண்டாவது புரோமோவில், பிக்பாஸ் போட்டியாளர்களுடன் கமல் உரையாடுகிறார். அப்போது கமல் மகத்தை பார்த்து பிக்பாஸ் ஒன்றை விட அறிவு மட்டம் குறைவாகவே உள்ளது என்கிறார். பின்னர், பார்வையாளர்களை பார்த்து மகத், மும்தாஜ் இருவரில் யாருடைய பழக்கவழக்கம் சரியில்லை என நினைக்கிறீர்கள் எனக் கேட்டகிறார், அப்போது பார்வையாளர்கள் அனைவரும் மகத் என்கிறார்கள். இதுகுறித்து கமல் மகதிடம் கேட்க மகத் நான் என்ன சொல்வது என்கிறார். அப்போது கமல் ஒரு குறும்படம் போட்டுவிடலாமா என்கிறார்.

மேலும் படிக்க