• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப் பச்சன் வீடு திரும்பினார்!!

February 10, 2018 www.tamilsamayam.com

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தி நடிகர் அமிதாப்பச்சன், மருத்துவ பரிசோதனைக்குப் பின் வீடு திரும்பினார்.

இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்ற அனைவராலும் புகழப்படுபவர் அமிதாப்பச்சன். இவர் 1969 யில் இருந்து திரையுலகில் நடித்து வருகிறார். இவர் தொகுத்து வழங்கிய கோன்பனேகா குரோர்பதி என்ற கேம் ஷோ, இந்தியா முழுவதும் இவருக்கு அதிக பெயரை தேடிக்கொடுத்தது.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு இவர் மும்பை பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலை மோசமாக உள்ளது என்று செய்திகள் பரவியது. ஆனால் அவர் வழக்கமாக செய்துகொள்ளும் உடல் பரிசோதனைக்கு சென்றதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, தனது உடல் பரிசோதனை முடிந்த பின் நேற்று இரவே அமிதாப் பச்சன் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளார். அவருடன் அவரது மகனும் பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன் உடனிருந்தார்.

மேலும் படிக்க