• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மணிகர்ணிகா: ஜான்சி ராணியாக மாறிய கங்கனா!

April 13, 2017 tamil.samayam.com

இந்திய நாட்டின் வீரப் பெண்மணியாக திகழும் ஜான்சி ராணி லக்ஷ்மிபாயின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் ஜான்சி ராணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் கங்கனா ரனாவத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் அடிக்கடி பளிச் கருத்துக்களை கூறி சர்ச்சை வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளும் கங்கனா ரனாவத், பாலிவுட் கான்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார். அவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் ‘மணிகர்ணிகா: தி குயீன் ஆஃப் ஜான்சி’ திரைப்படத்தின் ஸ்கெட்ச் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஜான்சி ராணியாக காட்சியளிக்கும் கங்கனா, கருப்பு வெள்ளை நிற போஸ்டரில், குறுகிய தலைமுடி, தலையில் முண்டாசுக் கட்டி, தோடு, மூக்குத்தி போட்டு கம்பீரம் காட்டுகிறார். ஜான்சி நாட்டு ராணியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இந்த காலக்கட்டத்துக்கு ஏற்ற விதத்தில் ராதா கிருஷ்ணன் ஜாகர்லமுடி இயக்கி வரும் இப்படத்துக்கு ‘பாகுபலி’ புகழ் திரைக்கதாசிரியர் கே.வி.விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைத்து வருகிறார்.

தனது வீரம், துணிச்சல், தன்னம்பிக்கையுடன் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு இந்திய வரலாற்றில் தனக்கென தனி இடம் பிடித்த வீராங்கனை ஜான்சி ராணி. இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி ஆங்கிலேயே ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாக திகழ்பவர்களில் ஜான்சி ராணி லக்ஷ்மிபாய் குறிப்பிடத்தக்கவர்.

கங்கனா நடிப்பில் இறுதியாக வெளியான ‘ரங்கூன்’ திரைப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டாலும், திரைப்படம் பெரிய வெற்றியை தேடித் தரவில்லை. இந்நிலையில், அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘மணிகர்ணிகா: தி குயீன் ஆஃப் ஜான்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க