• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போலி பட்டம் வழங்கிய வழக்கு: ஸ்ரீகாந்த் மனைவி ஆஜர்!

March 28, 2017 tamil.samayam.com

கல்லூரியில் போலி பட்டம் வழங்கிய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி கோர்டில் ஆஜராக உள்ளார்.

நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா. இவர் தன் தந்தையுடன் இணைந்து ஊட்டியில் மெரிட் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இதில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இதில் படித்த உடுமலைபேட்டை மாணவன் பிருத்விராஜ் கடந்த 2012ம் ஆண்டு ஊட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ” மெரிட் இண்டர்நேஷனல் கல்லூரியில் நான் படித்தேன். நான்கு ஆண்டுகள் படித்தால் மூன்று பட்டங்கள் கிடைக்கும் என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

எனது படிப்பு முடிந்தவுடன் தபாலில் பட்டத்தை அனுப்பி வைத்தனர். அந்த பட்டத்தை கொண்டு இண்டர்வியூவிற்கு சென்றபோது அதை அவர்கள் போலி என்றனர். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அண்ணா பல்கலை கழகம் சென்று விசாரித்தேன்.

அவர்கள் அதை உறுதி செய்தனர். இதனால் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் அளித்தார்.

அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் பட்டம் வழங்கியிதால் போலி பட்டமாகிவிட்டது என கல்லூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகிகளான ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா, அவரது தந்தை சாரங்கபாணி ஆகியோருக்கு பலமுறை சம்மன் அனுப்பட்டது. ஆனால் அவர்கள் ஆஜராகவில்லை.

கடைசியாக பிடி வாரண்ட் பிறப்பிக்கும் சூழ்நிலை ஏற்பட்டதால் வேறு வழியில்லாமல் நேற்று வந்தனாவும், சாரங்கபாணியும் ஊட்டி கோர்ட்டில் ஆஜராகினர். இந்த வழக்கை வரும் ஏப்ரல் 18க்கு கோர்ட் தள்ளிவைத்தது.

மேலும் படிக்க