• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போதை பொருள் விவகாரத்தில் நடிகை சார்மி நேரில் ஆஜர்

July 26, 2017 தண்டோரா குழு

போதை பொருள் விவகாரத்தில் நடிகை சார்மி சிறப்பு விசாரணை குழு முன்பு இன்று நேரில் ஆஜாரனார்.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, தெலுங்கு திரையுலக நட்சத்திரங்களான நவ்தீப், சார்மி, முமைத்கான் உள்ளிட்ட 12 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,நடிகை சார்மி, எக்காரணத்திற்காகவும் எனது ரத்த மாதிரியை எடுக்க கூடாது’ என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் சார்மியின் மனுவினை ஏற்றுக்கொண்டது. இதைத்தொடர்ந்து, சார்மியை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தான் விசாரிக்க வேண்டும், அப்போது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் உடனிருக்க வேண்டும், விசாரணையை வீடியோ எடுக்க வேண்டும், அவர் அனுமதி இல்லாமல் ரத்த மாதிரி எடுக்கக் கூடாதுஎன்று உத்தரவிட்டது.

இதையடுத்து, நடிகை சார்மி ஹைதராபாத்தின் நம்பள்ளி பகுதியில் உள்ள அலுவலகத்தில் விசாரணை குழு முன்பு ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க