” போகன் ” திரைப்படத்தில் ஜெயம் ரவியை விட அரவிந்த சாமி நடிப்பு சிறப்பாக இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி-அரவிந்த் சாமி கூட்டணி இணையும் படம் என்பதால் “போகன்” திரைப்படத்திற்கு ஆரம்பம் முதலே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.போகனில் இயக்குநர் ” ரோமியோ-ஜூலியட் ” படத்தை இயக்கிய லக்ஷ்மண் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நல்ல வேட்டையாக இருக்கும் என்றே கூறப்பட்டது.அதற்கேற்றவாறு போகன் திரைப்படம் நேற்று வெளியாகி,நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
கூடு விட்டு கூடு பாய்வது என்ற பேண்டசி விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் லக்ஷ்மண்.போகனில் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த சாமிக்கு சம பலமான கதாபாத்திரம் என்றாலும்,பெரும்பாலான காட்சிகளில் அரவிந்த சாமியே ஸ்கோர் செய்வதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
தனி ஒருவனில் அமைதியான வில்லனாக வந்து அசத்திய அரவிந்த சாமி,இந்த படத்தில் ஆர்ப்பாட்டமான வில்லனாக வந்து ரசிகர்களின் மனம் கவர்ந்துள்ளார்.ஏற்கனவே பல போலிஸ் கதாபாத்திரங்களில் ஜெயம் ரவியை பார்த்துவிட்டதால்,இந்த படத்தில் அவருடைய நடிப்பு அலுத்து விட்டதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஹீரோ நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்தால்,அவருக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும்.எடுத்துக்காட்டுக்கு மங்காத்தா படத்தில் அஜித் நடித்த நெகட்டிவ் ரோலை கூறலாம்.ஏற்கனவே தனி ஒருவனில் நெகட்டிவ் ரோல் மூலம் பட்டையக் கிளப்பிய அரவிந்த் சாமி,போகன் படத்திலும் தனி முத்திரை பதித்துள்ளார்.இதை பிரதிபலிக்கும் வகையில் டிவிட்டர்,பேஸ்புக்கிலும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்