• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேட்ட படத்தில் ஜித்தாக விஜய் சேதுபதி – கேரக்டர் போஸ்டர் வெளியீடு !

December 4, 2018 தண்டோரா குழு

காலா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வடமாநிலங்களில் 4 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது.

இப்படத்தில், ரஜினியுடன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் பேட்ட படத்தின் படபிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிசம்பர் 9ம் தேதி பேட்ட படத்தின் இசை வெளியிடவுள்ளதாக சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று இப்படத்தில் இடம்பெற்றுள்ள எஸ்.பி.பி, அனிருத் இணைந்து பாடிய “மரண மாஸ் ” என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரம் குறித்து, சன் பிக்சர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. ஜித்து’ என்ற பெயரில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதுகுறித்த போஸ்டரில் கையில் துப்பாக்கி உடன், வெறித்தனமாக காட்சி அளிக்கிறார். இந்த பதிவு வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க