• Download mobile app
11 Jun 2026, ThursdayEdition - 3774
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேட்ட படத்தின் சாதனையை 9 மணி நேரத்தில் முறியடித்த விஸ்வாசம் !

December 31, 2018 தண்டோரா குழு

சிறுத்தை சிவா தல அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியுள்ள படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விவேக், ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள இப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இதை தல ரசிகர்கள் செம டிரெண்ட்டாக்கி வருகின்றனர். சுமார் 10 லட்சம் ‘லைக்ஸ்’ பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற புதிய சாதனையை விஸ்வாசம்’ பட டிரெய்லர் பெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது. ‘பேட்ட’ படத்தின் டிடிரெய்லரின் ஒரு நாள் சாதனையை 9 மணி நேரத்தில் ‘விஸ்வாசம்’ முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க