• Download mobile app
30 May 2026, SaturdayEdition - 3762
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பூஜையுடன் துவங்கியது தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு !

October 3, 2019 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் உருவாகும் பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.மேலும்,முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் இப்ப்டத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், சென்னை தரமணி பிலிம் சிட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. படத்தின் பூஜையில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நடிகர் விஜய் வழக்கம்போல் பேண்ட் சர்ட் அணிந்து வந்திருக்க, விஜய்சேதுபதியும் அனிருத்தும் வேட்டி சட்டை அணிந்து வந்திருந்தனர்.

இதுகுறித்து ட்விட்டர் மொமெண்ட் இந்தியா, விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு,

“விஜயும், விஜய் சேதுபதியும் இணைந்து ‘தளபதி64’ சூட்டிங்கை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதைப் பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்” என்று ட்வீட்டியுள்ளது.

மேலும் படிக்க