• Download mobile app
29 Mar 2026, SundayEdition - 3700
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல நடிகரின் கால்ஷீட்டை தவறவிட்ட அட்லி!

May 6, 2017 tamilsamayam.com

பிரபல நடிகர் கொடுத்த கால்ஷீட்டை பயன்படுத்த தவறிவிட்டார் பிரபல இயக்குனர் அட்லி.

அட்லி ஒரு இயக்குனர் என்பதையும் தாண்டி தற்போது தயாரிப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார். தற்போது தயாரிப்பாளரானவுடன் எப்போதும் பிஸியாகியாகவே காணப்படுகிறார். இவர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் முதன்முதலாக தயாரித்த படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை அண்மையில் கமல்ஹாசன் முன்னணியில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்தார் அட்லி.

இப்படத்தை தொடர்ந்து அட்லி, நிவின் பாலியை வைத்து ஒரு படம் தயாரிக்க இருந்தார், அப்படத்திற்காக அவரிடம் கால்ஷீட் கேட்டார். அவரும் வந்த படங்களை ஒதுக்கிவிட்டு அட்லி படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். ஆனால் நடுவில் சில காரணங்களால் நிவின்பாலி படத்தையே மறந்துவிட்டார் அட்லி. இதனால் கடுப்பான நிவின்பாலி மறுபடியும் கால்ஷீட் கேட்க போனால் அட்லி படக்குழுவினரை திருப்பி அனுப்புகிறாராம்.

மேலும் படிக்க