• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘பிக் பாஸ்’ போல் ‘லால் சலாம்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மோகன்லால்!

August 21, 2017 tamilsamayam.com

நடிகர் மோகன்லால் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி போல் ‘லால் சலாம்’ என்ற நிகழ்ச்சியை மலையாளத்தில் தொகுத்து வழங்கவுள்ளார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான இருப்பவர் நடிகர் மோகன் லால். இவர் தமிழில் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மாதிரியான நிகழ்ச்சியை மலையாளத்தில் தொகுத்து வழங்கவுள்ளார்.

வெளிநாடுகளிலும், பாலிவுட்டிலும் பிரபலமான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, தற்போது தென்னிந்தியாவையும் மையம் கொண்டுள்ளது. தமிழில் 50 நாட்களைக் கடந்துவிட்ட இந்த நிகழ்ச்சி, தெலுங்கிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல் ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ், தெலுங்கைப் போல, மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன் லாலும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை மலையாளத்தில் தொகுத்து வழங்கவுள்ளார். அதற்கு ‘லால் சலாம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி, ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் போல இருக்குமா என்று ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் மலையாள ரசிகர்கள். இன்று முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாக உள்ளது.

மேலும் படிக்க