• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக் பாஸில் மஹத் காதலால் கண்ணீர் விட்ட யாஷிகா

June 29, 2018 தண்டோரா குழு

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கி இரண்டு வாரங்களை எட்டியுள்ளது.

பிக்பாஸ் கடந்த முறை போன்று அதிக பார்வையாளர்களை இந்த முறை கவரவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.இந்நிலையில் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு 3 புரோமோ வீடியோக்களை பிக்பாஸ் குழுவினர் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் மஹத் தனது காதலை வெளிப்படையாக சொல்வது போன்றும் அதற்கு யாஷிகா ஆனந்த் கண்ணீர் விட்டு அழுவது போன்றும் புதிய புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் மஹத் தன்னுடைய காதலைப்பற்றி யாஷிகாவிடமும் மற்ற பங்கேற்பாளர்களுடனும் கூறுகிறார்.இதனைக்கேட்டு தனது படுக்கை அறையில் கண்ணீர் விட்டு அழுகிறார் யாஷிகா.பின்னர்,தனது காதலை பாடலாக பாடுகிறார் மஹத்.இதனால் இன்றைய பிக் பாஸில் காதல் நிகழ்வுகள் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க