• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிக்பாஸ் வீட்டில் டேனியல் அனுப்பிய கடிதத்தை தூக்கி எறிந்த கமல்

August 11, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ்2 நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியிலிருந்து இதுவரை மமதி, ஷாரிக், அனந்த் வைத்தியநாதன், நித்யா உள்ளிட்ட 5 பேர் வெளியேறியுள்ளனர்.

தற்போது, பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளின் மூலமாக ஒவ்வொருவரின் உண்மை முகமும் வெளிவரத் தொடங்கியுள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமை தோறும் கமல்ஹாசன் வீட்டில் உள்ள போட்டியாளர்களிடம் அகம் டிவி வழியாக உரையாற்றுவார்.
இந்நிலையில்,இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான 2 புரமோ வீடியோக்களை பிக்பாஸ் குழுவினர்
இதுவரை வெளியிட்டுள்ளனர். முதல் ப்ரோமோவில், உருவங்கள் மாறலாம், பருவங்கள் மாறலாம், உள்ளங்கள் மாறுமா? என கூறி அகத்தின் அழகு அகத்திலேயே தெரியும் என கமல்ஹாசன் கூறுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது புரோமோவில், டேனியல் பொன்னம்பலம் குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அது குறித்து கமல் கேட்கும் போது இந்த கடிதம் தற்போதைக்கு போய் என்கிறார். இதற்கு கமல் கடிதம் வந்தது எனக்கு நீங்கள் சும்மா என்று சொல்கிறீர்கள். நீங்கள் அங்கு ஜெயிக்கிறதுக்காக வந்துருக்கிறீர்கள் நான் இங்கு ஜெயிச்சதுனால வந்துருக்கேன். என்னுடைய நேரத்தை வீணாடிக்காதீர்கள் என்று டேனியலின் கடிதத்தை கமல் தூக்கி எறிகிறார். என்ன நடந்தது என்பது இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தெரியவரும்.

மேலும் படிக்க