• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி புகழ் ராஜமௌலியின் அடுத்தபடத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

March 23, 2018 தண்டோரா குழு

பிரமாண்டமான இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் மாபெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் மாபெரும் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து,ராஜமௌலி அடுத்ததாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குவதாக செய்திகள் வெளியாகி வந்தன. எனினும்  அதிகார்பபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், தற்போது தனது புதிய படம் குறித்த ஒரு தகவலை வீடியோவில் வெளியிட்டுள்ளார் ராஜமௌலி. அதில், தனது புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை டிவிவி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ஆனால், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என்ற இரண்டு ஹீரோக்களின் முதல் எழுத்து, மற்றும் ராஜமௌலி பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து தற்காலிகமாக RRR என்று டைட்டீல் வைத்துள்ளார்கள்.இது படத்தின் டைட்டில் அல்ல என்றும் ராஜமௌலி தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று மொழிப்படம் என்பதால் மற்ற மொழிகளில் பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் படிக்க