• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகுபலி படத்தை பார்க்க 10ரூபாய் செலவிடமாட்டேன் பிரபல இயக்குனர் பேச்சு

June 6, 2017 தண்டோரா குழு

பாகுபலி 2 எல்லாம் ஒரு படமா, அதற்காக நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன்” என்று பிரபல மலையாளம் இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த படம் ராஜமெளலியின் பாகுபலி 2.இப்படம் உலகம் முழுவதும் 1700 கோடி வசூல் சாதனை படைத்து அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இந்நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல மலையாள இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகை கீது மோகன்தாஸ், நடிகர் ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அந்நிகழ்ச்சியில் பேசிய அடூர் கோபாலகிருஷ்ணன்,

“1991ம் ஆண்டு வெளியான தெலுங்கு படமான பாதாள பைரவி போன்று தான் ‘பாகுபலி 2’ படமும். பாகுபலி 2 படத்தால் இந்திய சினிமா துறைக்கு எந்த பயனும் இல்லை. இது போன்ற படங்களை பார்க்க நான் பத்து ரூபாய் கூட செலவு செய்ய மாட்டேன்” என்று கூறினார். உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த ‘பாகுபலி-2’ படத்தை பற்றி இப்படி ஒரு கருத்தினை ஏன் இவர் தெரிவித்தார்❓என்பதுதெரியவில்லை.

மேலும் படிக்க