• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

படப்பிடிப்பில் கங்கனா ரனாவத் காயம் நெற்றியில் 15 தையல்

July 20, 2017 தண்டோரா குழு

படப்பிடிப்பின் போது பலத்த காயம் அடைந்த நடிகை கங்கனா ரனாவத்திற்கு நெற்றியில் 15 தையல் போடப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் ஜான்சி ராணியின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் மணிகர்னிகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.இதில், சக நடிகர் நிஹர் பாண்டியாவுடன் வாள் சண்டையிடுவது போன்ற காட்சியில் கங்கனா ரனாவத் நடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, நிஹர் பாண்டியா வீசிய வாளில் இருந்து தப்ப வேண்டிய கங்கனா சிறிது தடுமாறியுள்ளார். இதனால் வாள் கங்கனாவின் நெற்றியை பதம் பார்த்தது. இதனைத் தொடர்ந்து, ரத்தம் கொட்டிய நிலையில் கங்கனா அருகில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கங்கனாவின் நெற்றியில் மருத்துவர்கள் 15 தையல்கள் போடப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க