• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் !

June 29, 2021 தண்டோரா குழு

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் டாக்டர் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

கொலமாவு கோகிலா படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படன் டாக்டர். ப்ரியங்கா அருள் மோகன், வினய் ராய் ஆகியோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து படத்தை தயாரித்துள்ளது.

திரையிரங்கில் வெளியாகும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கொரோனா இரண்டாம் அலையால் தள்ளிப்போனது. இந்நிலையில், டிஸ்னி + ஹாட் ஸ்டார் டாக்டர் படத்தை நேரடியாக தங்கள் தளத்தில் வெளியிடுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் படத்தை வெளியிடுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி ஏற்கனவே வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க