• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நாளை வெளியாகிறது ‘ஒரு குப்பைக் கதை’ படத்தில் இடம்பெறும் பிரேக்அப் பாடல்!

February 13, 2018 தண்டோரா குழு

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் தினேஷ். எல்லா முன்னணி கதாநாயகர்களுக்கும் மிகப் பிடித்தமான நடன இயக்குநர். தேசிய விருது உட்பட பல விருதுகளைக் குவித்தவர்.தினேஷ் தமிழ் திரையுலகில் ஹீரோவாக  அறிமுகாகும் படம் ஒரு குப்பைக் கதை.

இந்தப் படத்தில் தன் உதவி இயக்குநர் காளி ரங்கசாமியை  இயக்குநராக அறிமுகமாக்கியுள்ளார். பாகன் படத்தை இயக்கிய அஸ்லம்  அவருக்காக தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.இந்த படத்தைப் பார்த்ததும் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவருடைய ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் படத்தை வெளியிட உள்ளார்.

இப்படத்தில் தினேஷ் ஜோடியாக மனீஷா யாதவ் நடித்துள்ளார்.சுஜோ மேத்யூ, கிரண் ஆர்யன் என்ற இரு புதுமுகங்களும் இப்படத்தில் அறிமுகமாகிறார்கள்.யோகி பாபு, ஜார்ஜ் படத்தின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஆதிரா அம்மாவாக நடித்துள்ளார்.விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் ப்ரேக் அப் பாடல் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

 

மேலும் படிக்க