• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நயன்தாராவின் ‘அறம்-2’விரைவில் உருவாகிறது

November 16, 2017 தண்டோரா குழு

கோபி நயினார் இயக்கத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘அறம்’. கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தற்போதுள்ள சமூக பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் பேசப்பட்டு வருகிறது. மேலும்,படம் வெளியான மறுநாளில் இருந்தே படத்தின் வசூல் தொடங்கினாலும், பெரும் லாபத்தை ஈட்டியுள்ளது.

இந்நிலையில், ‘அறம்’ படத்தின் தொடர்ச்சியாக 2-ம் பாகத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.இரண்டாம் பாகத்தின் பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகவும் நயன்தாராவும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளவும் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் கூறியுள்ளார்.மேலும்,விரைவில் படக்குழு குறித்த முழுவிவரங்களும் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க