• Download mobile app
22 Feb 2026, SundayEdition - 3665
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துருவ் விக்ரமின் வர்மா படத்தின் புதிய இயக்குநர் இவர் தான் !

February 19, 2019 தண்டோரா குழு

கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட படம் அர்ஜுன் ரெட்டி. சந்தீப் வங்கா இயக்கத்தில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து, இப்படம் தமிழில் ரீமேக் செய்யமுடிவு செய்யபட்டு இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கினார். சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிப்பில் வர்மா என்ற தலைப்பில் இப்படம் உருவாகி வந்தது. அவருக்கு ஜோடியாக வங்காள மொழி நடிகை மேகா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஈஸ்வரி ராவ், ரைஸா வில்சன் உட்பட பலர் நடித்துள்ளனர். ரதன் இசையில், சுகுமார் ஒளிப்பதிவில், சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகிய இந்தப் படத்தை இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது.

படத்தின் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் சமீபத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால், இந்தப்படம் கைவிடப்படுவதாக படத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து அனைவருக்கு அதிர்ச்சியை அளித்தது. இதுமட்டுமின்றி, வேறொரு புதிய இயக்குனரை வைத்து படத்தை மீண்டும் எடுக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்தது.

இதனை தொடர்ந்து இப்படத்தினை அடுத்து இயக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தின் அசோசியேட் இயக்குனர் கிரிசய்யா இப்படத்தை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், பிரிட்டிஷ்-இந்திய மாடல் அழகி பனிதா சந்தூ இந்தப் படத்தில் துருவுக்கு ஜோடியாக நடிக்கவிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி நடிகை பிரியா ஆனந்த் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதைபோல், ஆத்தியா வர்மா படக்குழுவுடன் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் இணையவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவர் சிட்டிசன், ஆயுத எழுத்து, 7ம் அறிவு உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இவர் சூர்யாவின் 7ம் அறிவு படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவில் பிஸியாக இருந்த நிலையில் 7 ஆண்டிற்கு பிறகு விக்ரம் மகன் துருவ் நடிக்கும் தமிழ் படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க