• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துபாயில் நடக்கும் ரஜினியின் ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீடு!

June 20, 2017 tamilsamayam.com

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் ஆடியோ வெளியீடு துபாயில் நடைபெறவுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘2.0’. ‘எந்திரன்’ இரண்டாம் பாகமாக இந்தப் படம் உருவாகிவருகிறது. படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகள் எல்லாம் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி இப்படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த ஆடியோ வெளியீட்டு விழாவை துபாயில் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே, ரஜினி-ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த ‘எந்திரன்’ படத்தின் ஆடியோ வெளியீடு மலேசியாவில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

‘2.0’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்துள்ளார். ரஜினியை எதிர்க்கும் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளிவரவிருக்கிறது.

மேலும் படிக்க