• Download mobile app
28 Jul 2026, TuesdayEdition - 3821
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தளபதி67 படத்தின் தலைப்பு – ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

February 3, 2023 தண்டோரா குழு

விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் கூட்டணியில் உருவாகும் படம் தளபதி 67.இப்படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார். விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவு மேற்கொண்ட மனோஜ் பரமஹம்சா தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில், பெரும் எதிர் பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் புரோமோ வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க