• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

’தல’ அஜித் பெர்த்டே ஸ்பெஷலாக ‘விவேகம்’ டீஸர்!

February 4, 2017 tamilsamayam.com

‘தல’ அஜித்தின் விவேகம் படத்தின் டீஸர் அவரது பிறந்தநாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீரம், வேதாளம் படத்துக்கு பின் சிவா இயக்கத்தில் ’தல’ அஜித் நடிக்கும் படம், ‘விவேகம்’. இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ சமீபத்தில் வெளியானது. அன்று முதல் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களை முற்றிலுமாக ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியாக இப்படத்தின் டீஸர் ‘தல’ அஜித் பிறந்தநாளான மே-1ல் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14 அல்லது தல பிறந்தநாளான ’மே-1’ படத்தை வெளியட திட்டமிட்ட படக்குழு, தற்போது இத்திட்டத்தை கைவிட்டு கொஞ்சம் தள்ளி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் ‘தல’ ரசிகர்களுக்கு விருந்து வைக்க முடிவு செய்த படக்குழு அட்லீஸ்ட் அவரது பிறந்தநாளில் படத்தின் டீஸ்ரை வெளியிட முடிவு செய்துள்ளது. திட்டமிட்ட படி மே-1ல் டீஸர் வெளியானால், ஜூன்-22ல் படம் வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க