• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன்ஷிகாவை அழ வைத்த டி.ஆர்க்கு விஷால் கண்டனம்

September 30, 2017 தண்டோரா குழு

‘விழித்திரு’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தன்ஷிகாவை அவமானப்படுத்திய டி.ஆர்க்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விழித்திரு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் தன் பெயரில் தன்ஷிகா கூறவில்லை என கூறி அவரை கண்டித்தார்.இதனால் மேடையிலேயே அவர் அழுதார்.

சமூக வலைதளங்களில் டி.ராஜேந்தர்க்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தயாரிப்பு சங்கத் தலைவரும் நடிகருமான விஷால், டி.ராஜேந்தருக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில், தன் பெயரை சொல்லவில்லை என்பதற்காக இயக்குநர் டி.ராஜேந்தர் நடிகை தன்ஷிகாவை வன்மையாக கண்டித்ததும் தன்ஷிகா மன்றாடி மன்னிப்பு கேட்டும் கூட டிஆர் அவரை மன்னிக்காமல் தொடர்ந்து காயப்படுத்தியதையும் அறிந்தேன்.

டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு மூத்த கலைஞர். பன்முக வித்தகர். மேடையில் ஒரு நடிகை பேசும்போது ஒருவரது பெயரை மறப்பது என்பது இயல்பானதே… நானே சில மேடைகளில் அருகில் அமர்ந்திருந்தவர் பெயரை மறந்திருக்கிறேன். டிஆர் அவர்கள் சுட்டிக் காட்டிய பின்னர் சாய்தன்ஷிகா அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அப்படி மன்னிப்பு கேட்கும் தன் மகள் வயதையொத்த சாய்தன்ஷிகாவை பெருந்தன்மையாக மன்னித்திருக்கலாம். ஆனால் மென்மேலும் அவரைக் காயப்படுத்திய செயலை டிஆர் போன்ற ஒரு படைப்பாளியிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.

திரையுலகில் ஒரு பெண் நடிகையாவது எத்தனை சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு சாய்தன்ஷிகாவை நன்றாக தெரியும். அவரை அறிந்தவர்கள் அவர் அப்படி வேண்டுமென்றே அவமரியாதை செய்யும் குணம் கொண்டவர் அல்ல என்பதையும் அறிவர். அவர் மன்னிப்பு கேட்டும்கூட தொடர்ந்து காயப்படுத்தும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்திய டிஆர் அவர்களுக்கு நான் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

அதில், “டி.ராஜேந்தர் மூத்த பன்முக கலைஞர். மேடையில் சிலரின் பெயரை மறப்பது என்பது இயல்பானது. அதற்காக தன்ஷிகா மன்னிப்பு கேட்ட பின்பும் அவரைப் பற்றி தொடர்ந்து பேசியதை நான் ஒரு படைப்பாளியிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. தன்ஷிகாவைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும். அவர் அதை வேண்டுமென்றே செய்திருக்கமாட்டார். பொது மேடையில் மன்னிப்பு கேட்டும் தொடர்ந்து அவரைக் காயப்படுத்தும் விதமாக பேசிய டி.ராஜேந்தர் அவர்களுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க