• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனுஷிற்கு அண்ணாக நடிக்கும் சசிகுமார்

June 27, 2018 தண்டோரா குழு

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கெளதம் மேனன் ல் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’,தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி வருகிறார்.

‘எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ்’ பி.மதனுடன் இணைந்து கெளதம் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் மூலம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.சமீபத்தில்,வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தனுஷ் ஹாலிவுட் படம்,மாரி 2 படத்தில் பிஸியாக இருந்ததால் இப்படம் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில்,இப்படம் மீண்டும் ஜூலையில் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.தற்போது,இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தனுஷின் அண்ணாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க