• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டுவிட்டரில் ட்ரெண்டாகி வரும் #தொடைநடுங்கி சர்கார் ஹேஸ்டேக்

July 6, 2018 தண்டோரா குழு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சர்க்கார்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது.அந்த போஸ்டர்களில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றன.
இப்போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் மறுபுறம் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில் தற்போது,புகைபிடித்தபடி விஜய் இருக்கும் படங்களை உடனே இணையதளங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் இருந்து நீக்க வேண்டுமென்று பொது சுகாதாரத்துறை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் முருகதாசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. உடனடியாக நீக்காவிட்டால் அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சுகாதாரதுறை அறிவுறுத்தலை அடுத்து சர்காரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை தனது ட்விட்டர் பக்கத்திலிருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது.இதனால் தளபதி விஜய் மற்றும் சர்கார் டீமை நெட்டிசன்கள் #தொடைநடுங்கிசர்கார் என்ற பெயரில் ட்ரெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.தற்போது இந்த ஹேஸ்டேக்ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. எனினும் விஜய் ரசிகர்களும் விஜய்க்கு ஆதரவாக டுவீட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க