• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

செக்க சிவந்த வானம் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

August 24, 2018 தண்டோரா குழு

காற்று வெளியிடை படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் எனமிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து திரைக்கு விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து, ‘செக்கச் சிவந்த வானம்’ படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, ‘செக்கச் சிவந்த வானம்’ போஸ்டர்கள் கடந்த சில நாட்களாக வெளியானது. இந்நிலையில்,தற்போது நாளை காலை 10 மணிக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க