• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா 37 படத்தில் நடிக்கும் ஆர்யா அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

July 4, 2018 தண்டோரா குழு

செல்வராகவன் இயக்கத்தில் உருவான `என்ஜிகே’ படத்தை தொடர்ந்து,சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சூர்யாவின் 37 படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் மோகன்லால்,போமன் இராணி,அல்லு ஷிரீஸ்,சயிஷா,சமுத்திரக்கனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது.நியூயார்க்,பிரேசில்,மும்பை,சென்னை உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில்,இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகி இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.எனினும்,ஆர்யா என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.ஆனால் சூர்யாவுக்கு நிகரான ஒரு முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க