• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யா 37 படத்திலிருந்து விலகிய முக்கிய நடிகர் ஏன் ?

July 20, 2018 தண்டோரா குழு

விக்னேஷ் சிவனின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்கு பிறகு சூர்யா செல்வராகவனின் ‘NGK’ மற்றும் கே.வி.ஆனந்த் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

கே.வி.ஆனந்த் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தபடத்தை’லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படத்தில்,நடிக்க வனமகன் புகழ் சாயிஷா சைகல்,ஆர்யா,மோகன்லால்,சமுத்திரக்கனி,பொம்மன் இராணி மற்றும் அல்லு சிரிஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர்.இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது.இந்நிலையில்,இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமான தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் விலகியுள்ளார்.

இது குறித்து அல்லு சிரிஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில்,

“நான் நடிக்கும் ‘ஏபிசிடி’ படத்துக்கான தேதிகளில் சிக்கல் ஏற்படுவதால் கே.வி.ஆனந்த் சார் படத்திலிருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கும், இப்போது என் சூழலைப் புரிந்து கொண்டதற்கும் சூர்யா,கே.வி.ஆனந்த் மற்றும் லைகா நிறுவனம் ஆகியோருக்கு நன்றி.மீண்டும் வாய்ப்பு அமைந்தால் இணைந்து பணியாற்றுவோம்.படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என அறிவித்திருக்கிறார்.இதனால் அவருடைய கதாப்பாத்திற்கு இனி யார் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க