• Download mobile app
25 May 2026, MondayEdition - 3757
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சூர்யாவுக்கு ஜோடியாகும் ப்ரியா வாரியார் !

March 19, 2018 தண்டோரா குழு

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் வெற்றியை தொடர்ந்து  சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு பின் கே.வி.ஆனந்த் இயக்க உள்ளதாக  சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதற்கிடையில், தற்போது  இந்த படத்திற்கான நடிகர் நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா வாரியரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கண் அசைவில் இணையத்தில் வைரலான ப்ரியா வாரியாரின் ஒரு அதார் லவ் படமே ரிலீஸ் ஆகவில்லை. அதற்குள் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.எனினும், இதுவரை எந்த படத்திலும் நடிக்க ஒப்பு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க