• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ராதிகா, யோகி பாபு !

July 23, 2018 தண்டோரா குழு

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஒருகல் ஒரு கண்ணாடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் எம்.ராஜேஷ்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இதனையடுத்து ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிக்கும் இப்படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.இது சிவகார்த்திகேயனின் கேரியரில் 13-வது படமாம். சமீபத்தில், துவங்கிய இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க ராதிகா சரத்குமார் மற்றும் யோகி பாபு கமிட்டாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சதீஷ் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க