• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜாவின் புதிய படம்

February 19, 2018 தண்டோரா குழு

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’ படத்தில் இடம்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதியதோடு மட்டுமில்லாமல் அதை தனித்தன்மையான குரலில் பாடி பட்டி தொட்டியெங்கும் உள்ள ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றார் அருண்ராஜா காமராஜ்.அதைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பைரவா’ படத்தில் இடம்பெற்ற ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’வும் அவருடைய ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்தது.

பாடல் எழுதுவது, பாடுவதோடு மட்டும் நின்று விடாமல் சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘மரகத நாணயம்’ படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார். தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

முதல்முறையாக தனது நண்பருக்காக தனது சொந்த நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

 

மேலும் படிக்க