• Download mobile app
09 Sep 2026, WednesdayEdition - 3864
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்பு படத்தை இயக்குகிறாரா கார்த்திக் நரேன் ?

June 26, 2018 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று உச்ச நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிம்பு.அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் தோல்விக்கு பின் நடிகர் சிம்பு மீது தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது.அதன் பின் எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த சிம்பு மணிரத்னம் இயக்கியுள்ள செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார்.

சிம்பு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லேட்டாக வருகிறார் என சிம்பு மீது ஏற்கெனவே குற்றச்சாட்டு இருந்தது.அதனால் தான் அவரை வைத்துப் படமெடுக்கத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயங்கி வந்தனர்.இனிமேல் நான் லேட்டாக வரமாட்டேன் என சிம்பு அண்மையில் வாக்குறுதி கொடுத்தார்.இதையடுத்து,மீண்டும் சிம்புவிற்கு படவாய்ப்புக்கள் குவிந்து வருகிறது.

இதற்கிடையில்,சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணை தாண்டி 2 படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.இந்நிலையில் தற்போது சிம்புவை இயக்குனர் கார்த்திக் நரேன் சந்தித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சிம்புவை காரத்திக் நரேன் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.எனினும்,இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க