• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவுடன் இணைந்த அமீரின் நாயகி!

March 27, 2017 tamil.samayam.com

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன். இந்தப்படத்தில் சிம்பு மூன்று கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். ஏற்கனவே ஸ்ரேயா மற்றும் தமன்னா ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்போது அமீரின் ஆதிபகவன் படத்தில் நடித்த நீது சந்திரா மூன்றாவது ஹீரோயினாக இணைந்துள்ளார். அவருடைய கதாப்பாத்திரம் குறித்து சொல்லவில்லை என்றாலும், படத்தில் நடிப்பதை நீது சந்திரா உறுதி செய்துள்ளார்.

ஏப்ரல் பாதியில் தனக்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக நீது சந்திரா கூறியிருக்கிறார். சென்னை மற்றும் வெளிநாடுகளில் இவருடைய பாகம் படமாக்கப்பட உள்ளது. இந்தக்குழுவுடன் சேர்ந்து பணியாற்ற இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஷூட்டிங்கிற்காக ஆவலுடன் காத்திருப்பதாகவும் நீது சந்திரா கூறியுள்ளார்.

மேலும் படிக்க