சிம்பு AAA படத்தின் மூலமாக ஏற்பட்ட சறுக்கத்தை சரி செய்ய அடுத்து ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
இதனையடுத்து, சிம்பு கடந்த சில நாட்களாக தன் புதிய படம் பற்றிய அறிவிப்பை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறார்.அதில் இடைவேளை இல்லை பாடல்கள் இல்லை என அதிரடியாக தெரிவித்து வந்தார். இதுமட்டுமின்றி, யுவன் இசையமைக்க, சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி எடிட்டிங் செய்கிறார் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்படத்தை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் எடுக்கவுள்ளதாகவும் ஆனால் இந்தியாவின் முக்கிய மொழிகளான தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்து ரிலிஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் சிம்பு கூறியுள்ளார்.
மேலும், சிம்புவே இயக்கும் இப்படத்திற்கு இயக்குனர் கௌதம்மேனன் வசனத்தை எழுதவுள்ளதாகவும் சிம்பு தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு