• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிக்கலான நாட்களில் மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள் – ஓபிஎஸ்.,க்கு கமல் சூசகம்

February 8, 2017 tamil.samayam.com

தமிழக முதல்வர் பன்னீர் செல்வம், அதிமுக., பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு எதிராக வெளிப்படையாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் இரு கருத்தை பதிவு செய்துள்ளார்.

முதல் டுவிட்டில், “சில வருடங்களுக்கு முன் இதே பிப்ரவரி 7ம் தேதி நான் விஸ்வரூபம் பட சிக்கல்களுடன் வெளியானது. அந்த நாட்களை நினைவு கூற வைத்துள்ள தருணத்தில், மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணையாக நின்று ஆதரவு தெரிவித்தனர்.” என குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு டுவிட்டில், “தமிழக மக்களே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்பாக அவர்கள் எழுந்து விடுவார்கள்.” என பதிவு செய்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சூழலில் கமல் தெரிவித்துள்ள கருத்துக்கள் எப்போதும் போல மக்களை குழப்பி வருகின்றன.

மேலும் படிக்க