இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் தேசிய விருது பட்டியலில் இடம்பெற்ற ஒளிப்பதிவாளர் திரு இணைந்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்ட பிரபல ஒளிப்பதிவாளர் சுதீப் சாட்டர்ஜி விலகியதையடுத்து படக்குழு சிறந்த ஒளிப்பதிவாளரை தேடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக 64வது தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில், சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ’24’ டைம் மெஷின் பற்றிய படத்தின் ஒளிப்பதிவாரான திரு என்கிற திருநாவுக்கரசர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து திருவை சந்தித்து பேசிய ‘சங்கமித்ரா’ படக்குழு, அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக திரு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகவுள்ள ‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவிருக்கிறார். ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படத்தில் நடிக்கும் பிற நடிகர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்