• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் சன்னி லியோனை காண அலைமோதிய இளைஞர்கள்

August 17, 2017 தண்டோரா குழு

கேரள மாநிலம் கொச்சி சென்ற பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோனைக் காண பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

கேரள மாநிலம் கொச்சியில் செல்போன் ஷோரூம் ஒன்றைத் திறந்து வைப்பதற்காக பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இன்று சென்றிருந்தார். வர்த்தக நெருக்கடி மிகுந்த தெருவுக்குள், சன்னிலியோனைப் பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது.

இதனால் முற்பகல் 11.30 மணிக்கு நிகழ்ச்சிக்கு வரவேண்டிய சன்னி லியோன், 12.30 மணிக்குத்தான் விழா நடைபெறும் இடத்தைச் சென்றடைந்தார்.

பின்னர் ரசிகர்கள் திரண்டது குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சன்னி லியோன்,

தமக்கு பேராதரவு தந்த கொச்சி மக்களுக்கு நன்றி.கடவுளின் தேசத்திற்கு தாம் மேற்கொண்ட பயணத்தை ஒரு போதும் மறக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார். மேலும்,கூட்டத்திற்கு மத்தியில் தமது கார் செல்லும் படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ள சன்னி லியோன், அன்பின் கடலில் தாம் மிதந்து செல்லும் காட்சி என அதனை வர்ணித்துள்ளார்.

மேலும் படிக்க