 June 10, 2017
June 10, 2017  tamilsamayam.com
tamilsamayam.com
                                பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து வரும் `காலா’ படத்தில் ரஜினியின் மனைவியாக 90-களில் வெற்றிநடை போட்ட நடிகை ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் `காலா’. படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா’ குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.
தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தில், ரஜினி ஜோடியாக ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் `காலா’ படத்தில் கரிகாலனின் மனைவியாக 1990-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மாறாக ஹூமா குரோஷி, படத்தில் ரஜினியின் தோழியாகவோ அல்லது காதலியாகவோ வரலாம் என்றும் கிசு கிசுக்கப்படுகின்றன. மற்றொரு நாயகியான அஞ்சலி பாட்டீல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சம்பத், பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மும்பையில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பியுள்ள ரஜினி, ஜுன் 24-ஆம் தேதி மீண்டும் படப்பிடிப்பில் இணைகிறார்.