• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலா படத்தின் செம்ம வெயிட் பாடல் நாளை வெளியீடு உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள் !

April 30, 2018 தண்டோரா குழு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் காலா. இப்படம் வரும் ஜூன் மாதம் 7 ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் பாடல்கள் மே 9 ம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். இந்நிலையில் காலா படத்தில் உள்ள செம்ம வெயிட் என்ற பாடலை மட்டும் நாளை மாலை 7 மணிக்கு வெளியிட உள்ளதாக தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை வரவேற்க இப்போதே ரஜினி ரசிகர்கள் தயாராகிவிட்டனர். காலா படத்தில் ரஜினி உடன் ஹிந்தி பிரபலங்கள் ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர் மற்றும் சமுத்திரக்கனி, அஞ்சலி பட்டேல், சுகன்யா, உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் மும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதாவின் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க