• Download mobile app
03 Mar 2026, TuesdayEdition - 3674
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘காற்று வெளியிடை’: காதலர் தினத்தில் வெளியாகும் ‘வான் வருவான்..’!

February 6, 2017 tamilsamayam.com

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ படத்தின் ரொமாண்டிக் பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ‘அழகியே..’ பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் முதல் பார்வை டீசரில் வந்த ‘வான் வருவான்..’ எனும் காதல் பாடல் வருகிற பிப்.14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ரொமேண்டிக் ஆக்ஷன் திரைப்படமான ‘காற்று வெளியிடை’ படத்தில் கார்த்தி, அதிதி ராவ் ஹிதாரி ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். இவர்களுடன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆர்ஜே.பாலாஜி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள ‘காற்று வெளியிடை’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் புதுவித பரிமாணத்தில் கார்த்தி நடித்துள்ளார். ‘ரோஜா’ படத்தைப் போன்று இந்த படமும் காதல், ஆக்ஷனில் கலக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க