• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்தியின் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்கள்

November 8, 2017 tamil.cinemapettai.in

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில், 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர்.

வினோத் இயக்கத்தில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்துள்ளார் கார்த்தி. நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி.

அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் 17ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து, பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் கார்த்தி. கிராமத்துக் கதையான இதை, சூர்யாவின் ‘2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில், கார்த்தி ஜோடியாக 4 ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். பிரியா பவானிசங்கர், சயிஷா, அனுபமா பரமேஸ்வரன் ஆகிய மூவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நான்காவது ஹீரோயினுக்கான தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து, டிவி சீரியலில் ஹீரோயினாக நடித்து, ‘மேயாத மான்’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானிசங்கர்.

விஜய் சேதுபதி ஜோடியாக ‘ஜுங்கா’ படத்தில் நடிக்கும் பிரியா பவானிசங்கர், அடுத்து அருள்நிதி ஜோடியாகவும் நடிக்க இருக்கிறார்.

‘ஜுங்கா’ படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ள சயிஷா, ‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். ‘ஜுங்கா’ படத்தில் நடித்துவரும் இரண்டு ஹீரோயின்களுமே, இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன், தனுஷ் ஜோடியாக ‘கொடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

மேலும் படிக்க