• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்த்திக் நரேனின் நாடக மேடை படத்தில் இணைந்த முன்னணி நடிகர்கள் !

February 22, 2018 தண்டோரா குழு

துருவங்கள் 16 படத்தின் வெற்றி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். அப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாது பல பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்குநர் கெளதம் மேனனின் ஒன்றாக பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நரகாசுரன் என்ற படத்தை இயக்கியுள்ளார். அர்விந்த் சாமி, ஸ்ரேயா,சுந்தீப் கிஷன், ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்து  விரைவில்  திரைக்குவரவுள்ளது.

இந்நிலையில், தனது மூன்றாவது படமாக நாடக மேடை படத்தை இயக்கவுள்ளதாக கூறியிருந்தார்.இன்றைய நவீன சமூகத்தில் இளைஞர்களின் கண்ணோட்டம் எப்படி உள்ளது என்பதை பற்றிய படமான இப்படத்தில் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராமன் நடிக்கின்றனர். மேலும் நடிகர் பார்த்திபன் மற்றும் ரகுமான் முக்கிய வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க