• Download mobile app
04 Sep 2025, ThursdayEdition - 3494
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவிக்கோ பாடலுக்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்

June 8, 2017 தண்டோரா குழு

கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் கவிக்கோ அப்துல் ரகுமான் பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க உள்ளனர்.

அப்துல் ரகுமான் மரணம் அடைவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஜிப்ரான் அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அவரிடம் ‘நீங்கள் மெட்டுக்கு பாடல் எழுதவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களது பாடல் ஒன்றினை கொடுங்கள் அதற்கு நான் இசையமைத்து கொள்கிறேன்’, என்று கேட்டுள்ளார்.

இதையடுத்து, ஜிப்ரானின் வேண்டுகோளுக்கு இணங்க அப்துல் ரகுமானும் தனது பாடல் ஒன்றினை அவருக்கு அளித்துள்ளார்.

மலரின் நறுமணம் போகுமிடம், குழலின் பாடல்கள் போகுமிடம்’ என தொடங்கும் இந்த பாடல், விரைவில் ” ஆண் தேவதை” படத்தில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க