• Download mobile app
26 Jul 2026, SundayEdition - 3819
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘கழுகு 2’ படத்தில் கிருஷ்ணாவுடன் குத்தாட்டம் ஆடிய யாஷிகா !

January 12, 2019 தண்டோரா குழு

கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் வெளியான படம் கழுகு. இப்படத்தில் தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படம் வசூல் ரீதியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகம் ‘கழுகு 2’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. கிருஷ்ணா, காளி வெங்கட், பிந்துமாதவி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை சத்யசிவாவே இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றுள்ள சகலகலா வள்ளி என தொடங்கும் பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்பாடலில் பிக்பாஸ் 2 புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் கிருஷ்ணாவுடன் நடனமாடியுள்ளர். விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதிஅறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க