• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கமலின் விஸ்வரூபம் 2 டிரைலர் ரெடி !

March 1, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் இயக்கத்தில் 2013ம் ஆண்டு பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் விஸ்வரூபம். இதன் இரண்டாவது பாகமும் தயாராகி வந்தது.

இதுமட்டுமின்றி முதல் பாகத்தை எடுக்கும் போதே இரண்டாவது பாகத்துக்கான 40 சதவிகித படப்பிடிப்பை கமல் முடித்துவிட்டார் என சொல்லப்பட்டது. ஆனாலும் இன்னும் படத்தின் வெளியீடு பற்றி எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இதனைத்தொடர்ந்து, அண்மையில் படத்தின் புதிய போஸ்டர் மட்டும் வெளிவந்தது.

தற்போது விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலர் ரெடி என ‘தூங்கா வனம்’ படத்தின் இயக்குனர் ராஜேஷ் மா. செல்வா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இதனால் விரைவில் டிரெய்லர் வெளியீடு மற்றும் பட வெளியீடு குறித்த தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க