• Download mobile app
04 Feb 2026, WednesdayEdition - 3647
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கண்ணீருடன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ஷாரிக்

August 6, 2018 தண்டோரா குழு

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரபலங்கள் வெளியேற்றப்பட்டு வருக்கின்றனர்.

48 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். இதுவரை மமதி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, நித்யா ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது 12 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் உள்ளனர்.

அந்த வகையில் இந்த வார நாமினேஷனில் பொன்னம்பலம், மும்தாஜ், ரித்விகா, ஷாரிக், பாலாஜி, மஹத் என மொத்தம் 6 பேர் இடம் பெற்று இருந்தனர். இதில் யார் வெளியேறுவார்கள்? ஷாரிக்கா? மஹத்தா? என ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வந்தவது.

இதையடுத்து, நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷாரிக் குறைவான ஓட்டுகள் பெற்று இருந்ததால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நடிகர் ஷாரிக் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஷாரிக் வெளியேறுகிறார் என்று அறிவித்ததும் பிக்பாஸ் வீடு முழுவதும் சோகத்தில் மூழ்கியது. அனைவரும் ஷாரிக்கை கட்டிப்பிடித்து அழுதனர். ஷாரிக் போட்டியாளர்கள் அனைவரிடமும் நன்றி கூறி விடைப்பெற்றார்.

மேலும் படிக்க